This post is also available in: English (ஆங்கிலம்) हिन्दी (ஹிந்தி) বাংলা (பெங்காலி) தமிழ் മലയാളം (மலையாளம்)
நீங்கள் ஒரு கர்ப்பிணித் தாயாக இருந்தால், “நான் ஏன் மிகவும் சோர்வாக உணர்கிறேன்?” என்ற கேள்வி உங்களுக்கு இருந்தால் நீங்கள் இதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு காரணங்களுக்காக கர்ப்ப காலத்தில் சற்று சோர்வாக இருப்பது இயல்பானது. முதலில்-புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் உங்களை மெதுவாக்குகிறது. இரண்டாவதாக-உங்கள் ஆற்றலின் பெரும்பகுதியை உங்கள் உடல் குழந்தை உருவாக்கத்திற்கு திருப்பி விடுகிறது.
இருப்பினும், நீங்கள் எல்லா நேரமும் சோர்வாக உணர்ந்தால் – அது பின்வரும் காரணங்களால் இருக்கலாம்:
இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள்
உங்கள் கர்ப்பகால உணவில் பதப்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உணவுகள் அதிகம் இருந்தால், உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையானது ஏறி இறங்கும். இரத்த சர்க்கரை இவ்வாரு மிகவும் குறைவதால் நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். ஆனால் சில உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பகாலத்தில் பசியை சமாளிப்பது எப்படி என்பதைப் பற்றிய எங்களுடைய வலைப்பதிவைப் படியுங்கள்.
புரதக் குறைபாடு
குழந்தைக்கு புதிய செல்களை உருவாக்க அதிக அளவு புரதம் தேவைப்படுகிறது. உங்கள் உணவு புரதம் நிறைந்ததாக இல்லாவிட்டால், அது உங்களை பலவீனமாக உணரச் செய்யக்கூடும்.
உணவில் நல்ல கொழுப்புகளின் பற்றாக்குறை
ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் நரம்பு சமிக்ஞைகளின் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு நல்ல கொழுப்புகள் அவசியம். கொழுப்பு குறைபாடு உங்களை எரிச்சலடையவும், ஆர்வமில்லாமலும் உணர வைக்கலாம். உங்கள் உணவில் நல்ல கொழுப்புகளை எவ்வாறு சேர்க்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள, எங்கள் வலைப்பதிவை இங்கு படிக்கவும்.
இரும்புச்சத்து குறைபாடு
உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல இரும்பு போன்ற கனிமம் தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் இல்லாமல் செல்கள் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியாது. உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் இது சோர்வை ஏற்படுத்தக்கூடும்.
நீரிழப்பு
தண்ணீர் உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் தேவைப்படுகிறது, அதனால்தான் நீரிழப்பு காரணமாக உங்கள் உடல் சரியாக வேலை செய்யாததால் அது உங்களை சோர்வாக உணர வைக்கும்.
கர்ப்ப காலத்தில் ஆற்றல் அதிகரிக்கும் உணவுகளை எப்படி சாப்பிடுவது –
A: இரத்தத்தை சர்க்கரை நிலையாக வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்:
காலை உணவிற்கு முளைகட்டிய ராகி உணவுகளை சாப்பிடுங்கள். கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்வது ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்
நீங்கள் கஞ்சி, ரொட்டி, தோசை அல்லது பான்கேக் தயாரிக்கலாம்.
மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு முழு தானிய அரிசி மற்றும் முழு தானிய பருப்பு மற்றும் நெய்யுடன் சாப்பிடுங்கள்.
பழுப்பு அரிசி அல்லது சிவப்பு அரிசி க்கு தேர்வு செய்து, முழு பாசிப்பருப்பு, முழு மசூர், கபுலி சானா, ராஜ்மா, சாவ்லி, மட்கி போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுங்கள்
தினை கிச்சடி, பாசிப்பருப்பு பருப்பு சீலா, தோக்லா, இட்லி மற்றும் தோசை ஆகியவற்றை தின்பண்டங்களாக சாப்பிடுங்கள்.
B: புரதக் குறைபாட்டைத் தடுக்கும் உணவுகள்:
மதிய உணவு மற்றும் இரவு உணவில் பருப்பு சாப்பிடுங்கள்.
சிற்றுண்டி சாப்பிடும் போது பழங்களுடன் பனீர் கலந்து சாப்பிடுங்கள்.
அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால் முட்டை, கோழி, மீன் சாப்பிடுங்கள்.
C: நல்ல கொழுப்பு குறைபாட்டை தடுக்கும் உணவுகள்:
ஒவ்வொரு முறையும் ஒரு கைப்பிடி உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளை சாப்பிடுங்கள்.
நெய்யில் சமைத்து உங்கள் அரிசி மற்றும் ரொட்டிகளில் நெய் சேர்க்கவும்.
தேங்காய் லட்டு, தேங்காய் சட்னி சாப்பிடுங்கள்.
D: இரும்புச்சத்து குறைபாட்டைத் தடுக்கும் உணவுகள்:
ஒவ்வொரு உணவுடனும் சில பச்சை காய்கறிகளை சாப்பிடுங்கள். அம்ராந்த், பீட்ரூட், காலிஃபிளவர், கீரை, கடுகு, பார்ஸ்லி, முள்ளங்கி மற்றும் டர்னிப் ஆகியவற்றில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
சிற்றுண்டிகளாக அலிவ் லட்டு அல்லது அலிவ் சட்டு பரோட்டா சாப்பிடுங்கள். செய்முறைகளை இங்கே பார்க்கலாம்.
உணவுக்கு இடையில் ஆம்லா முராப்பாவை சாப்பிடுங்கள்.
நீங்கள் அசைவமாக இருந்தால், சிற்றுண்டியாக முட்டை சாப்பிடுங்கள்.
E: நீரிழப்பைத் தடுக்கும் உணவுகள்:
தினமும் ஒரு கிளாஸ் இளநீர் குடிக்கவும்.
மோர் குடியுங்கள்.
தண்ணீருடன் கூடுதலாக புதினா மற்றும் எலுமிச்சை கலந்து நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கவும்.
F: நல்வாழ்வை ஊக்குவிக்கும் உணவுகள்:
நாவல்பழம், சீதாப்பழம் போன்ற பருவகால பழங்கள்
பூசணிக்காய், சுரைக்காய், பீட்ரூட், வாழைக்காய், முருங்கைக்காய் போன்ற பருவகால காய்கறிகள்
தயிரை அப்படியே சாப்பிடலாம் அல்லது ரைதாவாக சாப்பிடலாம்.
உங்கள் சப்ஜிகளுடன் சேர்த்து மஞ்சள், ஜீரா மற்றும் ஹிங் போன்ற மசாலாப் பொருட்கள்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உங்கள் ஆற்றலை அதிகரிக்க சரியான உணவு சாப்பிடுவது முக்கியம். இருப்பினும், நாள் மூலம் ஆற்றலைப் பெற கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடுங்கள், தேநீர் மற்றும் காபியைத் தவிருங்கள். விரிவான தினசரி உணவுத் திட்டத்திற்கு, எங்கள் வலைப்பதிவை இங்கு பாருங்கள்.
எழுதியவர்
டாக்டர். டெப்மிதா தத்தா MBBS, MD
டாக்டர்.டெப்மிதா தத்தா MBBS, MD ஒரு மருத்துவர், குழந்தை வளர்ப்பு ஆலோசகர், WPA whatparentsask.com இன் நிறுவனர். பள்ளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவர் குழந்தை வளர்ப்பு தொடர்பான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயிற்சி பட்டறைகளை நடத்துகிறார். பச்சிளங்குழத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு வகுப்புகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் நடத்துகிறார். குழந்தை வளர்ப்பு, விளையாட்டு, கற்றல் மற்றும் உணவுப் பழக்கங்களில் இவர் ஒரு பிரபலமான நிபுணர். ஜக்கர்னாட் புக்ஸ் வெளியிட்ட குழந்தை வளர்ப்பு பற்றிய 6 புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். அவரது புத்தகங்கள் அவர்கள் வெளியிட்ட புத்தங்களில் அதிகம் படிக்கப்பட்டவையாக இருக்கின்றன. அவரது கனிவான அணுகுமுறை மற்றும் குழந்தை வளர்ப்பில் பிசியாலஜி மற்றும் மூளை அறிவியலை அவர் பயன்படுத்தும் முறைகளின் காரணமாக பல தேசிய மற்றும் பன்னாட்டு இதழ்களில் மேற்கோள் காட்டப்படுகிறார்.
This post is also available in: English (ஆங்கிலம்) हिन्दी (ஹிந்தி) বাংলা (பெங்காலி) தமிழ் മലയാളം (மலையாளம்)