This post is also available in: English (ஆங்கிலம்) हिन्दी (ஹிந்தி) বাংলা (பெங்காலி) தமிழ் മലയാളം (மலையாளம்)
நான் குழந்தை வளர்ப்பு ஆலோசகராக பயிற்சி பெற்ற ஆண்டுகளில்-பெற்றோர்கள் அவர்களால் முடிந்தவரை விரைவில் தங்கள் குழந்தைகளுக்கு தங்களால் முடிந்த அனைத்தையும் கற்பிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பதை நான் பார்த்துள்ளேன்.
நீங்களும் ஆர்வமாக இருக்கிறீர்களா?
அப்படியானால் உங்கள் குழந்தை எப்படி கற்றுக்கொள்கிறது என்பதை கவனியுங்கள் இதனால் நீங்களும் உங்கள் குழந்தைக்கு ஒரு சிறந்த ஆசிரியராக முடியும்.
குழந்தைகள் எப்படி கற்றுக்கொள்கிறார்கள்?
- குழந்தைகள் தொடுதல் மூலம் கற்றுக்கொள்கிறார்கள்.
தோல் உடலின் மிகப்பெரிய புலனுணர்வு உறுப்பு. பிறந்த சில மணி நேரங்களுக்குள் உங்கள் குழந்தை உங்கள் தொடுதலை அடையாளம் காண கற்றுக்கொள்கிறது. உங்கள் குழந்தையை நீங்கள் வைத்திருக்கும் விதத்திலிருந்து-உலகம் ஒரு பாதுகாப்பான இடமா அல்லது பயமுறுத்தும் இடமா என்பதை உங்கள் குழந்தை அறிந்துகொள்கிறது. உங்கள் குழந்தை உலகை ஒரு பாதுகாப்பான இடமாக நினைப்பது முக்கியம். உங்கள் குழந்தை பாதுகாப்பற்றதாக உணர்ந்தால்-அவர்கள் வேறு எதையும் கற்றுக்கொள்ள மிகவும் பயப்படுவார்கள்.
தொடுவதன் மூலம் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள உதவுங்கள் –
- உங்கள் குழந்தையை தொட்டு கைகளால் தூக்குங்கள்.
- குழந்தையை உங்கள் உடலோடு அணைத்து தூக்க கற்றுக்கொள்ளுங்கள்.
- உங்கள் குழந்தையின் கைகளுக்கு கையுறை அணிவிக்க வேண்டாம்.
2. குழந்தைகள் பார்வை மூலம் கற்றுக்கொள்கிறார்கள்
நாம் அனைவரும் பார்த்து கற்றுக்கொள்கிறோம். உங்கள் குழந்தை வேறுபட்டதல்ல. இருப்பினும், முதலில், உங்கள் குழந்தை தனது கண்களுக்கு 12 அங்குலங்களுக்குள் உள்ளவற்றை மட்டுமே பார்க்க முடியும். மெதுவாக அவர்களின் பார்வை மேம்படும் போது – அவர்கள் தொலைவில் உள்ள விஷயங்களைப் பார்க்க ஆரம்பிக்கலாம். அவர்கள் தங்கள் பார்வையில் நேரடியாக இல்லாத விஷயங்களையும் பார்க்கத் தொடங்குகிறார்கள்.
உங்கள் குழந்தை நன்றாக பார்க்கும் திறனை வளர்க்க உதவுங்கள் –
- நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும்போது உங்கள் குழந்தை கண்களைப் பாருங்கள்.
- வீட்டிலுள்ள பொருட்களை காட்டி விவரியுங்கள்.
- உங்கள் குழந்தை தனது கைகள் மற்றும் அவரைச் சுற்றியுள்ள பிற பொருட்களை உற்றுப் பார்க்க அனுமதியுங்கள்.
3. குழந்தைகள் கேட்பதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள்.
உங்கள் குழந்தை பிறப்பதற்கு முன்பே-அவர்கள் உங்கள் குரலையும் இதய துடிப்பையும் கேட்க முடியும். பிறந்த பிறகு, உங்கள் குழந்தை மெதுவாக உங்கள் குரலின் திசையில் பார்க்கவும், குரலுடன் முகத்தை பொருத்தவும் கற்றுக்கொள்கிறது. அவர்கள் மற்ற ஒலிகளை அடையாளம் காணவும் கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் உரத்த சத்தம் கேட்டால் திகைத்துப் போகிறார்கள்.
கேட்கும் திறன் எதிர்கால கற்றலுக்கு முக்கியமானது.
உங்கள் குழந்தை கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ள உதவுங்கள் –
- உங்கள் குழந்தையுடன் உரத்தக் குரலில் நிறைய பேசுங்கள்.
- அழைப்பு மணி அல்லது கார் ஹார்ன் போன்ற பிற ஒலிகளைப் பற்றி பேசுங்கள்.
4. குழந்தைகள் பாவனைகளின் மூலம் கற்றுக்கொள்கிறார்கள்.
குழந்தைகள் நாம் செய்யும் அனைத்தையும் அப்படியே செய்யும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறார்கள், அதன் மூலம் தான் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் பேசும்போது, உங்கள் வாயை அசைப்பதை போல தானும் செய்ய முயற்சிக்கும் போது, உங்கள் குழந்தை உங்களை அகன்ற கண்களுடன் உன்னிப்பாக கவனிப்பதை நீங்கள் பார்க்கலாம்.
செய்வதை திருப்பி செய்யும் திறன்களை உருவாக்க உங்கள் குழந்தைக்கு உதவுங்கள்-
- நீங்கள் பேசும்போது உங்கள் வாயை அகலமாகத் திறக்கவும்.
- மிகைப்படுத்தப்பட்ட முகபாவனைகளை காண்பியுங்கள்.
- உங்கள் நாக்கை வெளியே நீட்டி உங்கள் குழந்தை அதை செய்யும் வரை காத்திருங்கள்.
5. குழந்தைகள் ஆராய்வதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள்.
உங்கள் குழந்தையால் கண்டுபிடிக்கப்படுவதற்கு உலகம் காத்திருக்கிறது. ஆனால் உங்கள் குழந்தை உலகைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, அவர்கள் சுற்றித் திரிந்து விஷயங்களைப் புரிந்துகொண்டு அவற்றை எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
உங்கள் குழந்தை நகர்வதற்கு உதவுங்கள் –
- அதிகமாக தவழ்ந்து செல்ல அனுமதியுங்கள்
- திரும்புவதையும் ஊர்ந்து செல்வதையும் ஊக்குவிக்கவும்.
- தானாக உணவு உண்ண முன்கூட்டியே அனுமதியுங்கள் ,அதனால் கைகளில் பொருட்களைப் பிடிப்பதை குழந்தை கற்றுக் கொள்ளும்.
6. குழந்தைகள் பரிசோதனை மூலம் கற்றுக்கொள்கிறார்கள்.
குழந்தைகள் சிறிய விஞ்ஞானிகள். அவர்கள் சிறிய சோதனைகளைச் செய்வதன் மூலம் உலகத்தைப் பற்றி கற்றுக்கொள்கிறார்கள்.
உங்கள் குழந்தை உலகினைக் கண்டறிய உதவுங்கள்-
- காரணம் மற்றும் விளைவு பற்றி அறிந்துகொள்ள நீர் விளையாட்டை ஊக்குவிக்கவும்.
- ஈர்ப்பு விசையைப் பற்றி அறிய உங்கள் குழந்தை பொருட்களை கீழே போட அனுமதியுங்கள்.
ஒரு உற்சாகமான மற்றும் விரைவான கற்றலை வளர்ப்பதற்கு – உங்கள் குழந்தை என்ன கற்றுக்கொள்ள முயற்சிக்கிறது என்பதைக் கவனமாகக் கவனித்து, அதில் பங்கேற்பதன் மூலம் அதை எளிதாக்குங்கள்.
பக்கத்தில்
டாக்டர் டெப்மிதா தத்தா MBBS, MD
டாக்டர். டெப்மிதா தத்தா MBBS, MD ஒரு பயிற்சி மருத்துவர், ஒரு பெற்றோர் ஆலோசகர் மற்றும் WPA whatparentsask.com இன் நிறுவனர்
பள்ளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் குழந்தை வளர்ப்பு குறித்த ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயிற்சி பட்டறைகளை நடத்துகிறார். பச்சிளங்குழத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு வகுப்புகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் நடத்துகிறார். குழந்தை வளர்ப்பு, விளையாட்டு, கற்றல் மற்றும் உணவுப் பழக்கங்களில் இவர் ஒரு பிரபலமான நிபுணர். குழந்தை பராமரிப்பு பற்றிய அவரது புத்தகங்கள் ஜக்கர்னாட் புக்ஸ் மூலம் வெளியிடப்படுகின்றன மற்றும் அவர்கள் வெளியிட்ட புத்தகங்களில் அதிகம் வாசிக்கப்படுபவையாக அவை இருக்கின்றன. அவரது கனிவான அணுகுமுறை மற்றும் குழந்தை வளர்ப்பில் பிசியாலஜி மற்றும் மூளை அறிவியலை அவர் பயன்படுத்தும் முறைகளின் காரணமாக பல தேசிய மற்றும் பன்னாட்டு இதழ்களில் மேற்கோள் காட்டப்படுகிறார்.
This post is also available in: English (ஆங்கிலம்) हिन्दी (ஹிந்தி) বাংলা (பெங்காலி) தமிழ் മലയാളം (மலையாளம்)